Dj Arthihan'n Kavithaigal

Kavithaiyai nesi nee manithan aavai, Kathalai nesi nee kavijan aavai.


Search Dj's Blog

இந்த Website ஐ பற்றி மேலும் விபரங்கள் அறிய நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டியது:- Dj Arthihan Entertainment 077-3663359/0711647111(djarthihan@gmail.com>

This Is Dj Arthihan' இன் கதைத்துளிகள் Web Site Toolbar Click Here & Download that...........

6/06/2014

ஏனிந்த வெட்கம்


பனி மகளே! 
காதலன் கதிரவனை கண்டதும் ஏனிந்த வெட்கம் 
கண்ணிமைப்பதற்குள் காணாமல் போகிறாய்?.

கவிதை


எழுத்தும் மனமுமிணைந்து காகித 
தொட்டிலில் பிரசவித்த குழந்தை!..... 

அண்ணா


செயலில் அப்பாவையும் முகத்தில் அம்மாவையும்
காண்கிறேன்..... 

நெற்றிப்பொட்டு



நெருப்புக் குழம்பைக் கையேந்தி
வானவில் கரம்தனைத் தொட்டு,
பிம்பம் வீழ்ந்த வான்முகத்தில்,
மாலைக்கதிரவன் எடுத்து வைத்த வெண்ணிலாத் தட்டு,
என் தேவதையின் நெற்றிப்பொட்டு !!!

வலியால் துடிக்கும் இதயம்



நீ
காதலிக்கும் போது ..
ஏமாற்றவும் கற்றிருக்கிறாய் ..
நான்
காதலிக்கவும் ஏமாறவும்..
பிறந்திருக்கிறேன் ...
எனக்கும்
கற்று தா ...!!!
 எப்படி
ஏமாற்றுவது என்று சொல் ..
அடுத்த ஜென்மத்தில் ....
உன்னை....
நான் காதலிப்பேன் ....!!!
அப்போதாவது ...
உன்னிடம் ஏமாறாமல்... இருப்பேன் .....!!!

3/23/2010

இதயம்



நீ தூங்குவதக்கு சரியான
இடம் என் இதயம் எனின்,
நிறுத்தி வைப்பேன் இதய துடிப்பை
நீ கண் விழிக்கும் வரை....

2/04/2010

ஜனனம்


தாயின் கருவறையில் கண்மூடிக்கிடந்தேன்
அவள் கதறிய சத்தத்தில்
உயிர் கொண்டு எழுந்தேன்
மண்ணில் விழுந்தவுடன் எதனை இழந்தேன்
அதனை எண்ணியோ இராப்பகலாய் அழுதேன்
Dj Arthihan Entertainment. Address:- No:- Horowapothana Road, Velikkulam, Vavuniya, Sri Lanka. Telephone No :- 0094773663359 Mail ID :- djarthihan@gmail.com