Dj Arthihan'n Kavithaigal

Kavithaiyai nesi nee manithan aavai, Kathalai nesi nee kavijan aavai.


Search Dj's Blog

இந்த Website ஐ பற்றி மேலும் விபரங்கள் அறிய நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டியது:- Dj Arthihan Entertainment 077-3663359/0711647111(djarthihan@gmail.com>

This Is Dj Arthihan' இன் கதைத்துளிகள் Web Site Toolbar Click Here & Download that...........

2/01/2010

நிஜத்தில்



என்ன நினைத்தீர்கள் சாவதற்கு
நான் கோழை அல்ல
என்ன செய்வது
வாழ்வதற்கு நான் வீரனும் அல்ல

எனக்குப்பிடித்தது




அழுகை பிடிக்கும் எனக்கு
வேதனைகள் நீ தந்ததென்றால்
வலிகள் பிடிக்கும் எனக்கு
காயங்கள் உன்னால் ஆனதென்றால்
தோற்க பிடிக்கும் எனக்கு
வெற்றிகள் உன்னை சேரும் என்றால்
எதையும் இழக்க பிடிக்கும் எனக்கு
நான் உன்னோடு வாழ்வதென்றால்
இதென்ன .......
மரணம் கூட பிடிக்கும் எனக்கு
உனக்காக என் உயிர் தருவதென்றால் நிஜத்தில்

நல்லவர்கள் ஜாக்கரதை



மனிதனே
பொய் சொல்வதற்கு யோசிக்காதே
ஆனால் உண்மை சொல்வதற்கு முன்
சற்று யோசி
ஏனெனில் இருட்டில் வாழும் மனிதர்கள்
வெளிச்சத்தை குறை சொல்லக்கூடும்

பயணத்தில்



நான் கடந்து வந்த பாதையில்
கற்களோ முற்களோ இல்லை
படுகுழிகளோ மணல்மேடுகளோ இல்லை
அது பாதையே இல்லை

நான் பெற்ற இந்த வாழ்க்கை



தன் தாய்யை பிள்ளை
எவ்வளவு தான் அழவைத்தாலும்
கஷ்ட படுத்தினாலும்
அவமானத்தில் தலைக்குனிய வைத்தாலும்
அவள் கோபப்படுவாள்
நீ பிள்ளையா என்பாள்
ஆனால் அவளே நினைத்தாலும்
அவளால் உன்னை வெறுக்க முடியாது
அது போல் தான்
நான் பெற்ற இந்த வாழ்க்கை
என்னை எவ்வளவுதான் காயப்படுத்தினாலும்
என்னால் இந்த வாழ்க்கையை வெறுக்க முடியாது

அழமாட்டாயா ?




சோகத்தின் வெளிப்பாடு அல்ல அழுகை
பிறந்த குழந்தை கதறி அழுவது ஏன் ?
அதற்கென்ன சோகம் .....
தன் தாயோடு பேசும் மொழி அது
மண்ணில் பிறந்த மனிதருக்கெல்லாம்
தாய் மொழி அது
இம்மொழிக்கு மட்டுமே தாய்மை உண்டு
அதனால் தான் மனம் விட்டு அழுகையில்
பாரம் குறைகிறது

அன்புக்கோரிக்கை




காதலியே
என் கண்ணங்கள்
வறண்ட காடாய் மாறிப்போனது
முத்த மழை சிந்துவாயா
இன்னும் புன்னகை தூரல் ஏனோ ?

அவளுக்காக



அவளுக்கு பிடித்ததெல்லாம் எனக்கும் பிடிக்கும்
ஏனோ அவளுக்கு பிடிக்காததால்
என்னையே எனக்கு பிடிக்கவில்லை

நீ என்ன செய்தாய்



தனது பேனாவில் மையிட்டு
கவிதை எழுதினான் கவிஞன்
அதில் எழுத்துப்பிழைகள்
அதற்கு கவிஞன் வருத்தப்படலாம்
பேனா வருந்துவதில் அர்த்தமில்லை
இங்கு இறைவனே கவிஞன்
எனை கருவியாய் கொண்டு
அவன் எழுதிய கவிதையே வாழ்க்கை
அதில் எழுத்து பிழைகளாய் சோதனைகள்
அதற்கு அவன் வருந்தட்டும்
இவன் அல்ல

துணைவி




நான் தாலிகட்டவில்லை

ஆனால் என் மனைவி அவள்
மிகவும் அழகானவள்
என் கைக்கு அடக்கமானவள்
என் இஷ்டப்படி வளைந்து கொடுப்பவள்
எனது சோகத்தை உள்வாங்கி
எனக்காக காகிதத்தில் கண்ணீர் சிந்துபவள்...
அவள் வேறு யாரும் அல்ல
எனது பேனா

குயில் பாட்டு




அழகிய குயில் ஒன்று
ஒரு மரத்தின் மேல் அமர்ந்தது
அது பாடிய பாடலது
மரத்தின் நினைவுடன் கலந்தது
இலை உதிர் காலம் கண்டு
குயில் பறந்து போனது
போனதை எண்ணியே
மரம் வாடிப்போனது
வாடியது மரமா
எனது மனமா ?

காதலர்கள் கவனத்திற்கு




காதலும் மரணமும் ஒன்று
ஏனனில்
மரணம் உன்னை நாடினால்
அது மோட்சம்
நீ மரணத்தை தேடினால்
அது தற்கொலை
காதலும் அப்படியே

பெண் சாதி




மைக்கே
எனக்கு ஓர் சந்தேகம்
நீ ஆணா இல்லை பெண்ணா
நிச்சயமாக பெண்ணாகத்தான் இருக்க வேண்டும்
ஏனனில் உன்னிடத்தில் ரகசியங்கள் தங்குவதில்லை
ஊருக்கே உரக்க சொல்லிவிடுகிறாய்

ஞானி என்று சொல்கிறான்




மரணத்தை நேசிப்பவன்
எவனோ அவனே ஞானி
ஏனனில் அது
பயத்தின் உச்சக்கட்டம்
ஆசைகளின் முடிவு
இரெண்டையும் துறந்தவன் எவன் இங்கே

கண்ணீர் புஷ்பங்கள்




பூக்கள் அழும்

அவற்றை காம்பில் இருந்து பறிக்கும்போதல்ல

பெண் தன் கூந்தலில் இருந்து பிரிக்கும் போது.

காகித பூக்கள்




பனித்துளியை,
பூக்கள் முத்தமிடும்
காகித பூக்கள் விழுங்கிவிடும் ......
உணர்வுகளை துளைத்துவிட்டு
வாசமில்லா காகித பூவாய்
பிழைத்துக்கொண்டிருக்கிறான் மனிதன்
அதனால்தான் முத்தமிடவேண்டிய வாழ்கையை
கடமையென விழுங்கிக்கொண்டிருக்கிறான்
எது சுகமென அறியாமல்.

பெண்மீன்கள்




பெண்ணின் விழிகளை

மீன்கள் என வர்ணிப்பது ஏன் ?

அவை கண்ணீரிலே வாழ்வதாலா.

அழகி




உனை பார்க்கையில்
மனதில் ஓர் கவிதை பிறந்தால்சொல்லலாம்
ஓராயிரம் கவிதைகள் பிறக்குதே
எதை நான் என் இதழ்களில் முத்தமிட

உன் அழகோடு போராடி
என் விழிகள் நிமிடம் ஒரு முறை தோற்கின்றன
இப்போராட்டத்தில் நீ புறமுதுகிட்டாலும்
என் விழிகளே தோற்கின்றன
உன் பின்னழகில்

பாரடி
உன் முகம் தெரியவில்லை என்று
என் கை ரோமங்கள் கூட
தலை தூக்கிப்பர்ர்கின்றன
உன் குரலை கேட்கும் ஆசையில்
என் செவிகள் எனது சப்தத்தை கூட ஏற்க மறுக்கின்றன

நிலவின் நிழல் கூட
அழகாய் இருக்கும் என்று
உன் நிழலை பார்த்த பின்புதானடி
நான் தெரிந்து கொண்டேன்

போதுமடி
நான் நானாக இல்லை
என்னை திருப்பிக்கொடு
இல்லையேல் முழுவதுமாய் ஏற்றுக்கொள்.

எட்டாவது அதிசயம்




பூமியில் விழுந்த

காதலின் நிழல்

அது தாஜ்மஹால் , உலக அதிசயமானது

அன்று நிழல்

இன்று காதல்.

இதயம் முனுமுனுக்கிறது




கனவில் இடம் கேட்டு வந்தால்

மனதில் குடியேறிவிட்டாள்

உயிரில் விளையாடும் அழகே நீ

என்னை திருப்பி தருவாளோ

இல்லை தன்னையே தருவளோ

கையில் சிக்காத கடன்காரி

மௌனம் சொல்லாத அர்த்தம் அவள்

செவிகள் உணராத சப்தம் அவள்

என் விழியில் கலந்துவிட்டு

உறக்கம் பறித்துவிட்டு

மெல்ல சிரிக்கும் குழந்தை அவள்.

இதற்குமேல் என்ன சொல்ல...




அவள் முகம் பார்த்து விட்டால்

என் விழிகளுக்கு

இமைக்க கூட மனம் வர வில்லை

மனைவியாய் என் காதலி




இந்த மண்ணில்
பிறந்த நொடி முதல்
நீ காதலித்த
உன் மனதிற்கு
உருவம் கொடுத்து
உன்னிடத்தில்
சேர்த்துவிட்டான் இறைவன்



அவள்
உனது மனம்
இதை உணர்வாயேனில்
உன்
வாழ்கை நந்தவனம்

என்னுள் நீ




உன்னை
கருவில்
சுமப்பதால்
என் இதயம்
பொன்னானது

ஏன் இந்த வரிகள்
கவிதையானது ?

என்னவள்




இந்த கவிஞனை
திருத்தி எழுதிய
கவிதை அவள்

அந்த தேனிக்கள்
தேடி அலையும்
முகவரி அவள்

எந்த மண்ணிலும்
இல்லாத
வாசம் அவள்
Dj Arthihan Entertainment. Address:- No:- Horowapothana Road, Velikkulam, Vavuniya, Sri Lanka. Telephone No :- 0094773663359 Mail ID :- djarthihan@gmail.com