Dj Arthihan'n Kavithaigal

Kavithaiyai nesi nee manithan aavai, Kathalai nesi nee kavijan aavai.


Search Dj's Blog

இந்த Website ஐ பற்றி மேலும் விபரங்கள் அறிய நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டியது:- Dj Arthihan Entertainment 077-3663359/0711647111(djarthihan@gmail.com>

This Is Dj Arthihan' இன் கதைத்துளிகள் Web Site Toolbar Click Here & Download that...........

1/11/2010

ஆனந்தம்




என் மீது விழும்
மழைத்துளிகளை
கட்டிக்கொண்டு
காதல் செய்கிறேன் நான்,
நீ என எண்ணி...(Dj Arthihan)

ஏதோ ஆனது என்னுள்




மலர்களை
வாங்கிவந்து
மெத்தை மேல் தூவினேன்,
அவை
சுகமாய்
உறங்கட்டுமென...(Dj Arthihan)

நிலாச்சோறு




நிலவின்
வெளிச்சத்தில்,
கனவுகள்
உண்ண கொடுத்தேன்
என் உறக்கத்தை...(Dj Arthihan)

சுமை




காதலை
சொல்ல நினைத்தேன்
வார்த்தைகளில்,
அவையோ
கதறி அழுகின்றன
என் உணர்வுகளின்
சுமைதாங்க முடியாமல்...(Dj Arthihan)

மடம்



தெருவில் ஓர் பயித்தியக்காரன் தலையில் கல்லை சுமந்தபடி

அங்கும் இங்குமாய் திரிய
வழியில் கண்டவரெல்லாம்
அவனை பார்த்து சிரிக்க

அவன் அவர்களை பார்த்து சிரித்தான்
உடம்பில் உயிரை சுமந்து
அர்த்தமின்றி பிழைக்கும்
பயித்தியக்காரர்கள்
என்றெண்ணி...(Dj Arthihan)

அறியாமை




மிகச்சிறியது
எதுவும்
நம் கண்களுக்கு
புலப்படாததுபோல்
மிக எளியது
எதுவும்
நமக்கு புரிவதேயில்லை

வெறும் தீப்பொறியை
காட்டுத்தீயாக்கி
அதில் நாமும் எறிகிறோம்...(DJ Arthihan)

வினைத்தீர்க்க வேண்டும்



பிறப்பில்

துளைத்த எதையோ

தேடி அலையும் நம்மை

வினைத்தேடி அலைகிறது

அதன் தேடல் ஜெயித்துவிட

நம் வாழ்க்கை விதிவசமாகிறது...(Dj Arthihan)
Dj Arthihan Entertainment. Address:- No:- Horowapothana Road, Velikkulam, Vavuniya, Sri Lanka. Telephone No :- 0094773663359 Mail ID :- djarthihan@gmail.com